6th 1 St term- தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள்

1) பண்டைய இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்கள்-ஹரப்பா, மொகஞ்சதாரோ

2) தமிழ்நாட்டின் மிகவும் தொன்மையான நகரங்கள்-பூம்புகார் ,மதுரை ,காஞ்சி

3) உலகின் மிக தொன்மையான நாகரிகம்- மெசபடோமியா நாகரிகம் ( 6500ஆண்டுகளுக்கு முற்பட்டது)

4) பூம்புகார் துறைமுகம் அமைந்துள்ள இடம்-வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது (காவிரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது)

5) கண்ணகியின் தந்தை-மாநாய்கன் (பெருங் கடல் வணிகம்)

6) கோவலனின் தந்தை-மாசாத்துவான் (பெரு வணிகன்)

7) பட்டினப்பாலை ஆசிரியர்-கடியலூர் உருத்திரங்கண்ணனார் (கிமு 2ஆம் நூற்றாண்டு)

8) பூம்புகாரில் கடல்வழியாக இறக்குமதி செய்யப்பட்டவை-குதிரை

9) தரை வழித் தடங்கள் பொழிய இறக்குமதி செய்யப்பட்டவை-கரு மிளகு

10) சங்கம் வளர்த்த நகரம் என்று பெயர் பெற்ற பழமையான நகரம்-மதுரை

11)கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் எண்ணிக்கை-49 பேர்

12)முத்துக்களை உவரி என்னும் இடத்தில் இருந்து இறக்குமதி செய்த இஸ்ரேல் அரசர்-சாலமோன்

13)ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம்-மதுரை

14) நாளங்காடி ,அல்லங்காடி என்ற இரண்டுவகை அங்காடிகள் இருந்த இடம்-மதுரை

15) தூங்கா நகரம் எனப்படுவது-மதுரை

16) கிரேக்க வரலாற்றாசிரியர்-மெகஸ்தனிஸ்

17) மௌரிய வம்சம் அரசனான சந்திரகுப்தரின் அமைச்சர்-சாணக்கியர் (அர்த்த சாஸ்திரம்)

18) நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர்-யுவான் சுவாங்

19) புகார்-துறைமுக நகரம்
       மதுரை-வணிக நகரம்
       காஞ்சி-கல்வி நகரம்

20) நகரங்களில் சிறந்தது காஞ்சி எனக் கூறியவர்-காளிதாசர்

21) கல்வியில் கரையிலாத காஞ்சி எனக் கூறியவர்-திருநாவுக்கரசர்

22)புத்தகயா ,சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில் காஞ்சியும் ஒன்று என கூறிய சீன வரலாற்று ஆசிரியர்-யுவான் சுவாங்

23) கோயில்களின் நகரம்-காஞ்சிபுரம்

24) காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்-ராஜசிம்மன்

25) ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது-காஞ்சிபுரம்

26) சோழ நாடு-சோறுடைத்து
       பாண்டிய நாடு-முத்துடைத்து
       சேர நாடு-வேழமுடைத்து
       தொண்டை நாடு-சான்றோருடைத்து

Comments

Popular posts from this blog

தென்னிந்திய அரசுகள்

6 th 2nd term social science-வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்