6 th 2nd term- history குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

1)கி.மு ஆறாம் நூற்றாண்டின் புதிய எழுச்சிக்கு வித்திட்டவர்கள்-மகாவீரர்,கௌதமபுத்தர்

2) சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்டமக்களைக் குறிக்கும் சொல்-கணா

3) முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி- கணசங்கங்கள்

4) மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்கள்- ஜனபதங்கள்

5) மொத்த மகாஜன மதங்களின் எண்ணிக்கை-16

6)குரு,பாஞ்சாலம்,அங்கம்,மகதம்,வஜ்ஜி,காசி,மல்லம்,கோசலம்,
அவந்தி,சேதி,வத்சம்,மத்சயம்,சூரசேனம்,அஸ்மகம், காந்தாரம்,காம்போஜம் என்பவை யாவை-16 மகாஜன பதங்கள்

7) நான்கு முக்கிய மகாஜன பதங்கள் 🔥மகதம் -பீகார்
🔥அவந்தி- உஜ்ஜைனி
🔥கோசலம் -கிழக்கு உத்திரப்பிரதேசம்
🔥வத்சம் -கோசாம்பி ,அலகாபாத்

8) நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமை வாய்ந்தது-மகதம்

9)பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள்- 🔥ஹரியங்கா வம்சம்
🔥சிசுநாக வம்சம்
🔥நந்த வம்சம்
🔥மௌரிய வம்சம்

10)ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த அரசர்- பிம்பிசாரர்

11) ராஜ கிரகத்தில் முதல் பௌத்த மாநாட்டை கூட்டியவர்-அஜாத சத்ரு

12) பிம்பிசாரரின் மகன் மற்றும் புத்தரின் சமகாலத்தவர்-அஜாதசத்ரு

13) பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கு அடித்தளமிட்டவர் மற்றும் அஜாத சத்துருவின் மகன்-உதயன்

14) சிசு நாக வம்சத்தைச் சேர்ந்த அரசர் மற்றும் தலைநகரை ராஜ கிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்தில் மாற்றியவர்-காலசோகா

15) இரண்டாம் பௌத்த மாநாட்டை வைசாலியில் கூடயவர்-காலசோகா

16) இந்தியாவில் முதன்முதலாக பேரரசை உருவாக்கியவர்கள்-நந்தர்கள்

17) முதல் நந்த வம்ச அரசர் யார்-மகாபத்ம நந்தர்

18) மகாபத்ம நந்தரின் எட்டு மகன்களும் எவ்வாறு அழைக்கப்பட்டன -நவ நந்தர்கள்

19)சந்திரகுப்த மவுரியர் ஆல் வெற்றி கொள்ளப்பட்ட கடைசி நந்த வம்ச அரசர்-தன நந்தர்

20)பண்டைய மகத நாட்டில் இருந்த பௌத்த மடாலயம் எது-நாளந்தா

21) சமஸ்கிருத சொல்லான நாளந்தாவின் பொருள்-வற்றாத அறிவை அளிப்பவர்

22) பொருத்துக
அ) கௌடில்யர்-அர்த்த சாஸ்திரம்
ஆ) விசாகதத்தர்-முத்ரா ராட்சஸம்
இ) மாமூலனார்-அகநானூற்றுப் பாடல்
ஈ) மெகஸ்தனிஸ்-இண்டிகா

23) கிரேக்க ஆட்சியாளரின் தூதுவராக சந்திரகுப்த மௌரியர் அவையில் இருந்தவர்-மெகஸ்தனிஸ்

24) இந்தியாவின் முதல் பெரிய பேரரசு-மௌரிய பேரரசு

25)மௌரிய பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலி புத்திர நகரில் நுழைவு வாயில்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களின் எண்ணிக்கை எத்தனை-64,570

26) மௌரியப் பேரரசை நிறுவியவர் யார்-சந்திரகுப்த மவுரியர்

27) சந்திரகுப்தர் ஐ தென் இந்தியாவிற்கு அழைத்து சென்ற சமணத் துறவி யார்-பத்திரபாகு

28) சந்திரகுப்தர் சரவணபெலகோலாவில் (கர்நாடகா) சமண சமய சடங்குகான_செய்து உயிர் துறந்தார்-சல்லேகனா(உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல்)

29) பிந்துசாரர் இயற்பெயர்-சிம்ஹசேனா

30) சந்திரகுப்த மௌரியரின் மகன்-பிந்துசாரர்

31) பிந்துசாரரின் மகன்-அசோகர்

32)  பிந்துசாராருக்கு பிறகு உஜ்ஜயினியின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்-அசோகர்

33)மவுரிய அரசர்களில் மிகவும் புகழ்பெற்ற அரசரான அசோகர் எவ்வாறு அழைக்கப்பட்டார்-தேவனாம் பிரியர் (கடவுளுக்கு பிரியமானவன்)

34) கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர்-அமிர்த கதா (எதிரிகளை அழிப்பவன்)

35) அசோகர் கலிங்கத்தின் மீது போர் தொடுத்த ஆண்டு-கி-மு.261

36) கலிங்கத்துப் போரின் பயங்கரத்தை அசோகர் தன்னுடைய எந்த பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்-13 வந்து பாறை கல்வெட்டு

37) அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார் என்று கூறியவர்-h.g.வெல்ஸ்

38)சந்த அசோகர் என்பவர்-தீயஅசோகர்

39) தம்ம அசோகர் என்பவர்-நீதிமான் அசோகர்

40)அசோகரின் எந்த தூண் கல்வெட்டு தர்மத்தின் பொருள் குறித்து விளக்குகிறது-இரண்டாவது பாறை கல்வெட்டு

41)அசோகர் தன்னுடைய மகன் மஹிந்தவையும் மகள் சங்கமித்ரா வையும் பவுத்தத்தை பரப்ப எங்கு அனுப்பினார்-இலங்கை

42) அசோகர் பௌத்த கொள்கைகளை நாடு முழுவதும் பரப்ப நியமித்த புதிய அதிகாரிகளின் பெயர்-தர்ம மகா மாத்திரர்கள்

43) பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மாநாட்டை கூட்டியவர்-அசோகர்

44) நான்காவது பௌத்த மாநாட்டை நடத்தியவர்-கனிஷ்கர்

43) அசோகரின் ஆணைகள் மொத்தம் எத்தனை-33

44) அரசருக்கு உதவியாக இருந்த அமைச்சரவையின் பெயர்-மந்திரி பரிஷத்

45) அசோகரின் எந்தெந்த பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்களை பற்றியும் சத்திய புத்திரர் களைப் பற்றியும் குறிப்பிடுகின்றது-2,13 வந்து பாறை கல்வெட்டு

46) லும்பினி யிலுள்ள அசோகரது கல்வெட்டுகள் குறிப்பிடும் வரிகள் யாவை-பாலி, பாகா

47) ஜூனாகத்/கிர்னார் கல்வெட்டு-ருத்ரதாமன் (சுதர்சன ஏரி பற்றி குறிப்பிடுகிறது)

48) செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன-மஸாகாஸ்

49)நாகார்ஜுன கொண்டா வில் உள்ள மூன்று குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள் யாரைப் பற்றியது-தசரத மௌரியர் (அசோகரின் பேரன்)

50) பொருத்துக
அ)ராஜ கிரகம்-ராஜ்கிர்
ஆ)பாடலிபுத்திரம்-பாட்னா
இ)கலிங்கா-ஒடிசா

51) மௌரிய வம்சத்தின் கடைசி அரசர்-பிரகத்ரதா



Comments

Popular posts from this blog

6th 1 St term- தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள்

தென்னிந்திய அரசுகள்

6 th 2nd term social science-வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்